Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துவர மேற்குவங்க அரசு ஒத்துழைக்கவில்லை: அமித்ஷா குற்றச்சாட்டு

மே 09, 2020 09:20

புதுடெல்லி: வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துவர மேற்குவங்க அரசு ஒத்துழைக்கவில்லை எனவும், இது தொழிலாளர்களுக்கு அநீதி எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வெளிமாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். அவர்களை சிறப்பு ரயில் அழைத்து செல்ல மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து பலரும் சிறப்பு ரயில்கள் மூலமாக சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைப்பது குறித்து மேற்குவங்க அரசு, போதுமான ஒத்துழைப்பை வழங்கவில்லை. இது மேற்குவங்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அநீதியாகும். இது அவர்களுக்கு மேலும் கஷ்டங்களை உருவாக்கும். கொரோனா வைரஸ் சோதனையில் மக்கள் தொகையின் விகிதத்தில் மிகக்குறைந்த பரிசோதனை விகிதத்தையே மேற்குவங்கம் கொண்டுள்ளது. அங்கு இறப்பு விகிதமும் 13.2 சதவீதம் என உயர்வாக உள்ளது. இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்