Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகம் வரும் அனைவருக்கும் கட்டாய பரிசோதனை: அரசு உத்தரவு

மே 08, 2020 07:05

சென்னை: தமிழகம் வரும் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு தனியாகவோ, குழுவாகவோ வருவோர் அனைவருக்கும், அவர்கள் நுழையும் பகுதியில், கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும். ரயிலில் வந்தால், ரயில் நிலையத்தில், சோதனை நடத்தப்பட வேண்டும். அதன்பின், அருகில் உள்ள இடத்தில், அனைவரும் தங்க வைக்கப்பட வேண்டும்.

கொரோனா தொற்று இல்லை என்றால், அவர்களை, வீட்டில், 28 நாட்கள், தனிமையில் இருக்கும்படி கூறி அனுப்பலாம். நோய் தொற்று அதிகம் உள்ளவர்களை, மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.

நோய் தொற்றின் தாக்கம், குறைவாக இருந்தால், வீட்டில் தனித்திருப்பதாக கூறினால், அனுப்பி வைக்கலாம். இல்லையெனில், தனிமைப்படுத்தும் முகாமிற்கு, அனுப்பி வைக்க வேண்டும். நோய் அறிகுறிகளை பொறுத்து, முடிவு செய்ய வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்