Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அம்மா உணவகங்களில் 3 நேரமும் இலவச உணவு: அலைமோதும் மக்கள் கூட்டம்

மே 01, 2020 05:44

திருச்சி: திருச்சி மாநகரில் உள்ள 11 அம்மா உணவகங்களிலும் 3 நேரமும் இலவசமாக உணவு வழங்கப்படுவதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பசியால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் அம்மா உணவகங்களை தொடங்கினார். இங்கு மிகவும் குறைந்த விலையில் ஒரு இட்லி ரூ.1-க்கும் மதியம் சாம்பார் தயிர் சாதம் ரூ.5-க்கும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால் திருச்சி மாநகரில் உள்ள 11 அம்மா உணவகங்களிலும் காலை மதியம் இரவு என 3 நேரமும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது மதியம் சாப்பாட்டுடன் தினமும் ஒரு முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அம்மா உணவகங்களில் வழக்கத்தை காட்டிலும் 3 மடங்கிற்கு மேல் பொதுமக்கள் வருகிறார்கள். இதனால் டோக்கன் வழங்கப்பட்டு 3 நேரமும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. திருச்சி அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள அம்மா உணவகத்தில் உணவுக்காக ஏராளமான ஆண்களும் பெண்களும் சமூக விலகலை கடைபிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து உணவு சாப்பிட்டு சென்றனர்.

தலைப்புச்செய்திகள்