Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் கல்வி: காரைக்குடி அழகப்பா பல்கலை முடிவு

ஏப்ரல் 29, 2020 12:28

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கு உட்பட்ட இணைவு கல்லூரிகளில் ஆன்-லைன் மூலம் கல்வியை கற்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அதன்  முதல்வர்களுக்கு துணைவேந்தர் ராஜேந்திரன் அறிவுறுத்தினார்.

அழகப்பா பல்கலையின் கீழ் 44 இணைவு பெற்ற கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரி முதல்வர்களுடன் பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் ஆன்-லைன் வாயிலாக கல்வி கற்பிப்பது மிக முக்கியம். அதை நடைமுறைப்படுத்த கல்லூரி முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய தொழில் நுட்பங்களை கல்வி கற்பித்தலில் கையாளுவதற்கு  இத்தருணம் உகந்தது.

அதுமட்டுமன்றி இதுவரை தேசிய தர நிர்ணயகுழுவின் தர நிர்ணயம் பெறாத கல்லூரிகள் உடனடியாக தர நிர்ணயம் பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். தர நிர்ணயம் பெற்றால் மட்டுமே மத்திய, மாநில அரசு வழங்கும் கல்லூரி வளர்ச்சிக்கான நிதிகளை பெற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அழகப்பா பல்கலை தொலை தூர கல்வி இயக்ககத்தின் பேராசிரியர்களுடன் தொடர்பு கொண்டு ஆன்-லைனில் தற்போது நடத்தப்பட்டு  வரும் தொடர் வகுப்புகள் குறித்து கேட்டறிந்தார். 

தலைப்புச்செய்திகள்