Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் தடையை மீறி மாட்டிறைச்சி விற்பனை: 5 பேர் மீது வழக்குப்பதிவு

ஏப்ரல் 27, 2020 11:36

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கலெக்டர் உத்தரவை மீறி மாட்டிறைச்சி விற்பனை செய்த 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். 

உலகெங்கும் பரவி பல உயிர்களை பலி கொண்டு வரும் கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் கடந்த கடந்த மார்ச் 25ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனிமனித சமூக விலகளை கடை பிடிக்கும் விதமாக திருச்சி மாவட்ட கலெக்டர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காய்கறி சந்தைகள், இறைச்சி கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளார்.

இந்நிலையில் திருவெறும்பூர் அருகிலுள்ள பனையக்குறிச்சி பகுதிகளில் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதனடிப்படையில் அங்கு சென்ற திருவெறும்பூர் வட்டாட்சியர் ஞானாமிர்தம், வருவாய் ஆய்வாளர் வைதேகி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். 

அப்போது பனையக் குறிச்சி சர்க்கார்பாளையத்தை சேர்ந்த புஷ்பராஜ், ஆரோக்கியராஜ், பால் காட்டர், பீட்டர் காட்டர், ஜான் ஆகிய 5 பேரும் மாட்டு இறைச்சி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த ஐந்து பேரின் மீது வருவாய்த்துறையினர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்