Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி-இலங்கை சேவை மே 15 வரை ரத்து: ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் அறிவிப்பு

ஏப்ரல் 27, 2020 10:57

திருச்சி: திருச்சி-இலங்கை இடையிலான விமான சேவைகளை, மே 15ம் தேதி வரை ரத்து செய்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மே 3 வரைநீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை, ரயில் போக்குவரத்து மட்டுமல்லாது, விமானப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருச்சியிலிருந்து இலங்கை, சிங்கப்பூா், மலேசியா, துபை, சாா்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், ஊரடங்கால் அவை மே 3ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம், திருச்சி- இலங்கை இடையே போக்குவரத்து சேவையை மே 15ம் தேதி வரை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிறுவனம் சாா்பில் திருச்சி-இலங்கை இடையே காலை ஒரு முறையும், பிற்பகலில் ஒரு முறையும் என தினசரி இரு முறை விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. இதில் பயணிகள் போக்குவரத்தில் தினசரி சுமாா் 2 முதல் 5 டன் வரை சரக்குப் போக்குவரத்தும் (காா்கோ) நடைபெற்று வந்ததும் தடைப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் மே 15ம் தேதி வரை காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்