Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவிலிருந்து குணமடைந்து நெல்லையில் 20 பேர் டிஸ்சார்ஜ்

ஏப்ரல் 23, 2020 03:27

திருநெல்வேலி: நெல்லை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 20 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தமிழகத்தில் கொரோனா ஆரம்ப கட்டத்தில் எத்தகைய தீவிரத்தை காட்டி வந்ததோ அந்த தீவிரம் தற்போது மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. ஒரு சில நாட்கள் அதிக தொற்றுகள் உறுதி செய்யப்பட்டாலும், பெரும்பாலும் எண்ணிக்கை ஆறுதல் அளிக்கும் வகையில் தான் உள்ளது.
நேற்றுமுன்தினம் எடுக்கப்பட்ட பரிசோதனையில் வெறும் 33 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது வரை தமிழகத்தில் 662 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 20 பேர் குணமாகியுள்ளனர்.

அவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் அவர்களை கைதட்டி உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தனர். குணமாகி வீட்டுக்கு புறப்பட்ட அவர்கள் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நன்றி தெரிவித்து விடை பெற்றனர்.
நெல்லை மாவட்டத்தில் இதுவரை 62 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்