Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அறிவும், அன்பும்! பாடலை வெளியிட்டார் கமல்ஹாசன்

ஏப்ரல் 23, 2020 09:04

சென்னை: ‘அறிவும், அன்பும்’ என்ற தலைப்பில் ஊரடங்கு உத்தரவு நேரத்தில் உதவி செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடலை கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார்.

இந்தியாவில் லாக்டவுன் நேரத்தில் தினக்கூலி தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அன்றாடம் விற்பனை செய்தால்தான் கால் வயிற்று கஞ்சிக்கு வழி என்பவர்கள் உணவில்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அரசு என்னதான் உதவி செய்தாலும், அது போதவில்லை. தன்னார்வலர்களும் முன்வந்து உதவுகிறார்கள்.

இந்நிலையில் அனைவரிடமும் அன்பு செலுத்தி உதவி தேவையானவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒரு பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கு இசையமைத்தவர் ஜிப்ரான், படத்தொகுப்பு செய்தவர் மஹேஷ் நாராயணன்.

இந்த பாடலை பாடியோர்: மாஸ்டர் லிடியன், பாம்பே ஜெயஶ்ரீ, ஆண்ட்ரியா ஜெரிமியா, யுவன் சங்கர் ராஜா, அனிருத், சித்தார்த், முகேன் ராவ், சித் ஶ்ரீராம், ஷங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாஸன், தேவி ஶ்ரீ பிரசாத், (காணொளியில் தோன்றும் வரிசைப்படி ) 

இனி பாடல் வரிகளை காண்போம்: 
பொது நலமென்பது தனி மனிதன் செய்வதே, தன் நலமென்பதும் தனி நபர்கள் செய்வதே, பொது நலமென்பது தனி மனிதன் செய்வதே, தன் நலமென்பதும் தனி நபர்கள் செய்வதே, அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை, அடாத துயர் வரினும் விடாது வென்றிடுவோம், அகண்ட பாழ் வெளியில் ஓர் அணுவாம் நம்முலகு - அதில் நீரே பெருமளவு. நாம் அதிலும் சிறிதளவே. சரி சமம் என்றிடும் முன்பு உனைச் சமம் செய்திடப் பாரு, சினையுறும் சிறு உயிர் கூட உறவெனப் புரிந்திடப் பாரு, சரி சமம் என்றிடும் முன்பு உனைச் சமம் செய்திடப் பாரு, சினையுறும் சிறு உயிர் கூட உறவெனப் புரிந்திடப் பாரு உலகிலும் பெரியது உம் அகம் வாழ் அன்பு தான், புதுக் கண்டம் புது நாடு என வென்றார் பல மன்னர், அவர் எந்நாளும் எய்தாததை சிலர் பண்பால் உள்ளன்பால் உடன் வாழ்ந்து உயிர் நீத்து அதன் பின்னாலும் சாகாத உணர்வாகி உயிராகிறார். சரி சமம் என்றிடும் முன்பு உனைச் சமம் செய்திடப் பாரு, சினையுறும் சிறு உயிர் கூட உறவெனப் புரிந்திடப் பாரு,  அழிவின்றி வாழ்வது நம் அறிவும் அன்புமே அழிவின்றி வாழ்வது நம் அறிவும் அன்புமே, சரி சமம் என்றிடும் முன் உனைச் சமம் செய்திடப் பாரு, சினையுறும் சிறு உயிர் கூட உறவெனப் புரிந்திடப் பாரு, அழிவின்றி வாழ்வது நம் அறிவும் அன்புமே. உங்கள் நான் கமல் ஹாசன் நன்றி.
இவ்வாறு ‘அறிவும், அன்பும்’ பாடலை வெளியிட்டார் கமல்ஹாசன் வெளியிட்டார்.

தலைப்புச்செய்திகள்