Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீட்டில் மரமேறி மாங்காய் பறித்த நடிகை

ஏப்ரல் 23, 2020 08:58

சென்னை: கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருக்கும் பிரபல நடிகை வீட்டில் மரமேறி மாங்காய் பறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்நேரத்தில் நான்கு பேருக்கு உதவி செய்யலாமே என்று ரசிகர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு. சில தமிழ்ப்படங்களில் நடித்துள்ள இவர், பல வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான மோகன்பாவுக்கு விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என்ற மகன்களும் லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளனர். மூன்று பேரும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.

லட்சுமி மஞ்சு தமிழில், ஆதி நடித்த மறந்தேன் மன்னித்தேன், மணிரத்னம் இயக்கிய கடல், ராதா மோகன் இயக்கிய காற்றின் மொழி ஆகிய படங்களில் நடித்துள்ளார். பல தெலுங்கு படங்களில் நடித்துள்ள அவர், சில படங்களைத் தயாரித்தும் உள்ளார். ‘டிவி’தொடர்களிலும் நடித்துள்ளார். 
கொரோனா காரணமாக  சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக நடிகர், நடிகைகளும் வீடுகளுக்குள் இருக்கின்றனர். இந்த லாக்-டவுனில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை வீடியோவாகவும், போட்டோவாகவும் அவர்கள் தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இதை ஏராளமான ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர். அவர்களுக்கும் வேறு பொழுது போக்கு இல்லை என்பதால், நடிகர், நடிகைகளின் சமூகவலைத்தளப் பக்கங்களை பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில், நடிகை லட்சுமி மஞ்சு, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள் வீடியோவில் அவர், தனது வீட்டின் மெயின் கேட்டின் முன் உள்ள, மாமரத்தில் ஏறி, ஒரு கிளையில் அமர்ந்து மாங்காய்கள் பறித்து  அதை கீழே நிற்கும் தனது மகளுக்கு கொடுக்கிறார்.

இந்த வீடியோவுக்கான கேப்ஷனில், “எனக்கு சிறுவயதாக இருக்கும்போதே, இந்த மாமரம் எங்கள் வீட்டில் இருக்கிறது. ஆனால் ஒரு நாளும் அதற்கு ஹாய் சொல்லவோ, வீட்டில் சுற்றுப்புறத்தை அது எவ்வளவு இனிமையாக வைத்திருக்கிறது என்பதைக் கவனிக்கவோ எனக்கு நேரம் இருந்ததில்லை. ஆனால், இப்போது நான் கவனிக்காத விஷயங்களை எடுத்துக்கொண்டு மகிழ்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள் சிலர், இந்த லாக்-டவுன் நடிகைகளை இப்படி மாத்திடுச்சே? என்று கூறியுள்ளனர். இந்த நேரத்துல ஒரு வேளை உணவுக்கு சிரமப்படும் குடும்பங்கள் நாள்தோறும் பரிதவித்து வருகின்றன. நாலு பேருக்கு உதவி பண்றதை விட்டுவிட்டு மரம் ஏறி மாங்காய் பறிப்பது முக்கியமா? என்று சில ரசிகர்கள் நெத்தியடியாக கேள்வியும் கேட்டு பதிவிட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்