Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இயல்புநிலை திரும்பும் வரை காணொளி காட்சி மூலம் வழக்குகள் விசாரணை: பார் கவுன்சில் கோரிக்கை

ஏப்ரல் 21, 2020 12:26

சென்னை: “கொரோனா தொற்று பரவல் முடிந்து இயல்பு நிலை திரும்பும் வரை தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் காணொளி காட்சி மூலமாக மட்டுமே வழக்குகளை விசாரிக்கப்பட வேண்டும்,” என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
நீதிமன்றங்களுக்கு மே மாதம் அறிவிக்கப்பட்டிருந்த கோடை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பல நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும். குறிப்பாக, கொரோனா முடியும் வரை பாதுகாப்பான முறையில் நீதிமன்றத்தை நடத்த போதிய வசதிகள் இல்லாத கீழமை நீதிமன்றங்களில் காணொளி காட்சி மூலமாக மட்டுமே வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தமிழக மற்றும் புதுவை அரசுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக ஆண்டு தோறும் மே 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை விடப்படும் கோடை விடுமுறை ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் அண்மையில் அறிவித்தார். அவர் தனது அறிவிப்பில், மே 2 முதல் 31 ம் தேதி வரை வழக்கம் போல் நீதிமன்றம் செயல்படும். தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் கோடை விடுமுறையும் ரத்து செய்யப்படுகிறது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்