Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

யூடியூப் சேனல் நடத்தி, பிரதமர் குறித்து ஆபாசமாக பேசிய பெனட் ஆன்டனி மீது வழக்குப்பதிவு

ஏப்ரல் 20, 2020 10:08

சென்னை: பெனட் ஆன்டனி என்பவர், நடத்திய சேனிலில் பிரதமர் குறித்து, அருவெறுக்கத்தக்க வகையிலும், ஆபாசமாகவும் பேசி வீடியோ வெளியிட்டார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாகர்கோவிலை சேர்ந்தவர் பெனட் ஆண்டனி. தற்போது தானேயில் வசித்து வரும் அவர், தனியாக பென் டாக்ஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், பிரதமர் குறித்து அருவெறுக்கத்தக்க வகையிலும், ஆபாசமாகவும் பேசியுள்ளார். கோவை ஈஷா யோகா மையத்தின் சத்குரு, மாதா அமிர்தானந்தமயி குறித்தும், ஆபாசமாக பேசியுள்ளார். அனைவரையும் தே... என ஆபாசமாக பேசியுள்ளார்.

இது தொடர்பாக போலீசின் சைபர்கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஐபிசி சட்டம், சிசிபி சிஆர். எண். .113/2020 u/s 153A, 294(b), 505(2), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெனட் ஆண்டனி, அந்த வீடியோவை நீக்கிவிட்டார்.
தனக்கு எதிராக எப்ஐஆர் பதியப்பட்டதால், பிரதமருக்கு எதிராக ஆபாசமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டு இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்