Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மது கிடைக்காத விரக்தியில் மருந்து தயாரிக்கும் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த வாலிபர்

ஏப்ரல் 19, 2020 10:19

திருச்சி: மது கிடைக்காத விரக்தியில் மருந்து தயாரிக்கும் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த வாலிபர் போலீசார் வந்ததும் தப்பி ஓடினார்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பால், மளிகை கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரம் மட்டும் திறந்து இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மதுபானங்கள் கிடைக்காததால் குடிமகன்கள் பலர் தவித்து வருகிறார்கள். போலீசாரின் அதிரடி வேட்டையில் ஆங்காங்கே சட்டவிரோதமாக விற்பனை செய்யும் மதுபாட்டில்களையும் வாங்க முடியாத நிலைக்கு பலர் ஆளாகி உள்ளனர்.

இந்தநிலையில் மது கிடைக்காத விரக்தியில் திருச்சி தில்லைநகரில் உள்ள மருந்து தயாரிக்கும் கெமிக்கல் கடை உள்ளது. இந்த கடையில் ஸ்பிரிட் உள்ளிட்ட கெமிக்கல்கள் பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும். சம்பவத்தன்று நள்ளிரவு இந்த கடையின் பூட்டை உடைத்து மர்ம ஒருவர் உள்ளே புகுந்து எதையோ தேடி கொண்டு இருந்தார். இதை கண்ட அந்த பகுதியினர் தில்லைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் கடையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். 

அவர் அங்கு சென்று பார்த்துவிட்டு பொருட்கள் எதுவும் திருட்டுபோகவில்லை என்று தெரிவித்தார். மது கிடைக்காத விரக்தியில் மருந்து கடையில் இருந்து போதைக்கு எதையாவது எடுத்து குடித்துவிடலாம் என்ற நோக்கத்தில் அந்த வாலிபர் உள்ளே வந்து இருக்கலாம் என்று போலீசார்
தெரிவித்தனர். இது குறித்து புகார் எதுவும் தரப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்