Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போடியில் கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்ற 4 பேர் கைது

ஏப்ரல் 17, 2020 01:30

தேனி: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள சூழ்நிலையில் தேனி மாவட்டம் போடியில் கள்ளச்சாராயம் காய்ச்ச முற்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரொனா வைரஸ் தாக்கத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாடு முழுவதும் அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு மதுக்கடைகள் மூடப்படுள்ள நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள புது காலனி பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்ச சிலர் முற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் போடி நகர காவல் துறையினருக்கு புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சந்தனமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த செல்வம் என்பவர் மகன் பிரதீப்(26) புதூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் விவேக்(25) கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் பிரபாகரன்(28) சந்தனமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முருகன் என்பவர் மகன் சரவணன்(32) ஆகிய 4 பேரை கையும், களவுமாக கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்துடன், அங்கிருந்த கள்ளச்சாராயம் காய்ச்ச தேவையான மூலப்பொருட்களையும் தீயிட்டு அழித்தனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள சூழ்நிலையில் தேனி மாவட்டம் போடியில் கள்ளச்சாராயம் காய்ச்ச முற்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்