Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் இதுவரை 2 லட்சம் பேர் கைது

ஏப்ரல் 16, 2020 11:59

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி, வெளியே சுற்றிய 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதேபோல் பறிமுதல் செய்த வாகனங்கள் இன்று முதல் திரும்ப ஒப்பைடக்குமாறு காவல்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுக்க தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. மே 3ம் தேதி வரை இந்தியா முழுவதும் இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகமும் அதை தீவிரமாக பின்பற்றி வருகிறது. இந்த காலகட்டத்தில் அநாவசியமாக யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் துறை சார்பில் வேண்கோள் விடப்பட்டது.

ஆகையால் 144 தடையுத்தரவும் அமலில் உள்ளது. அதையும் மீறி தமிழகத்தில் வெளியே வந்து உலாவிய 2 லட்சத்து, 8,139 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதன்பிறகு அவர்களை சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 79 ஆயிரத்து 827 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 1.94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ரூ.89 லட்சத்து, 23 ஆயிரத்து 644 அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேநேரம் தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நேற்று முதல் திரும்ப ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்