Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ட்ரோன் கேமரா மூலம் கேரம்போர்டு விளையாடியவர்களை விரட்டிய போலீசார்: தலைதெறிக்க ஓடிய இளைஞர்கள்

ஏப்ரல் 16, 2020 06:27

திருப்பூர்: ஊரங்கில் வீட்டில் இருக்காமல், பொது இடத்தில் கேரம் விளையாடிய போது, போலீசாரின் ட்ரோனிலிருந்து தப்பிக்க, கேரம் போர்டுக்குள் இளைஞன் ஒருவன், மறைந்து கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

நாடு முழுவதும் வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திருப்பூரில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க ட்ரோன் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், போலீசார் ட்ரோன் மூலம் கண்காணித்த போது, ஊத்துக்குளி சாலை மண்ணரை பகுதியில் இளைஞர்கள் ஒன்றிணைந்து கேரம் விளையாடியது தெரிந்தது. இதனையடுத்து ட்ரோன் மூலம் ஓட ஓட விரட்டினர். அதில் ஒரு இளைஞன் கேரம் போர்டை தூக்கிக் கொண்டு ஓட, சற்று தூரம் சென்று அதன் பின்னால் மறைந்து கொண்டான். பின் விட்டால் போதும் என போர்டை தூக்கி எறிந்து விட்டு தலைதெறிக்க ஓடினான்.

இந்த வீடியோவை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திருப்பூர் போலீசார் வெளியிட்டுள்ளனர். காமெடி நடிகர் வடிவேலுவின் வசனங்களுடன் வெளியான இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 

தலைப்புச்செய்திகள்