Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஞானசுதா ஆன்மீக அமைப்பு சார்பில் ஒரு லட்சம் பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள்

ஏப்ரல் 15, 2020 04:17

கும்பகோணம்: கும்பகோணத்தில் கொரோனா தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியர்கள், மற்றும் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு ஞானசுதா என்ற ஆன்மீக அமைப்பு சார்பில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் நகராட்சி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டு வழங்கப்பட்டன.

கும்பகோணத்தில் 27 ஆண்டுகளாக ஞானசுதா என்ற பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை சார்பில் சமூக, ஆன்மீக கலாச்சார முன்னேற்ற சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் கடந்த 11 ஆண்டுகளாக கும்பகோணம் மற்றும் சுற்று வட்டவார பகுதிகளில் சுமார் 46 ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரானா வைரல் பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் உணவின்றி வாடும் தூய்மைப் பணியாளர்கள், மற்றும் கும்பகோணதைச் சுற்றியுள்ள கூலித் தொழிலாளர்கள், நலிவடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் என ஒரு லட்சம் பேருக்கான காய்கறிகள், அரிசி, மளிகைப் பொருட்கள் அடைங்கிய ஒரு லட்சம் பைகளை நேரிடையாக வழங்க தடைவிதிக்கப்பட்டுள்ளதால், ஞான சுதா அமைப்பினர் கும்பகோணம் நகராட்சி ஆணையர் லட்சுமியிடம் வழங்கினர்.

இந்த பைகளை நகராட்சி ஆணையர் லட்சுமி மற்றும் அதிகாரிகள் வழங்க ஒரு மீட்டர் சமூக இடைவெளி விட்டு நின்று தூய்மைப் பணியாளர்கள் பெற்றுச் சென்றனர். மீதமுள்ள நிவாரணப் பொருட்கள் அவரவர் இருப்பிடங்களுக்கேச் சென்று வழங்கப்படும் என்று ஆணையர் லட்சுமி தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்