Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ் புத்தாண்டு: முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து

ஏப்ரல் 13, 2020 07:26

சென்னை: நாளை (ஏப்.,14) தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல்வர் இபிஎஸ், மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இணைந்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

சித்திரை முதல் நாளாம் ‛சார்வரி' என்ற தமிழ் புத்தாணடு புலருகின்ற இந்த இனிய நன்னாளில் உலகெங்கும் வாழ்கின்ற அன்புக்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எங்களது உளம் கனிந்த வாழ்த்துகளை அன்போடு தெரிவித்து கொள்கிறோம். எத்தனை இடர்பாடுகள் இருப்பினும் காலத்தால் அனைத்தம் மாறும். புதியன தோன்றும், மகிழ்ச்சி மலரும் என்ற புதிய நம்பிக்கைகளை புத்தாண்டு நமக்கு அளிக்கிறது.

இன்று உலகை சூழ்ந்திருக்கும் இன்னல்கள் யாவும் தீர்ந்து பொய்யாகி, புதுவாழ்வு மலர புத்தாண்டில் எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் என எங்களது மனமார்ந்த பிரார்த்தனையை தமிழ் மக்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்