Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் ஸ்டாலின்: முதல்வர் பதிலடி

ஏப்ரல் 11, 2020 03:44

சென்னை: அரசு எதுவும் செய்யவதில்லை என்பதை போல் சித்தரித்து, பரிந்துரை செய்கிறேன் என்ற பெயரில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறி வருகிறார் என முதல்வர் பழனிசாமி பதிலடி கொடுத்தார்.

'கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகள், ஒத்துழைப்பு மற்றும் உதவி செய்வதற்கு திமுக தயாராக உள்ளது' என திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதினார்.

இதுகுறித்து, முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: கொரோனா தடுப்பு பணியில் மருத்துவ பணியாளர்கள், டாக்டர்கள், நர்ஸ்கள், போலீசார்கள் இரவு பகல் பார்க்காமல் தன்னலமற்று பணியாற்றுகிறார்கள். எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டு அவர்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. கொரோனா கேரளாவில் வந்த போதே, போர்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகம் எடுத்தது.

எம்.எல்.ஏ.,க்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி, மக்கள் நலனுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. இதனை வரவேற்காமல் கண்டனம் தெரிவிப்பது ஸ்டாலினின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. அரசு எதுவும் செய்யவதில்லை என்பதை போல் சித்தரித்து, பரிந்துரை செய்கிறேன் என்ற பெயரில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறி வருகிறார். இவ்வாறு அவர் செய்வது வருத்தம் அளிக்கிறது.

டாக்டர்கள், நர்ஸ்களின் முயற்சியால் தமிழகத்தில் இறப்பு விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளதாக மத்திய அரசு தமிழகத்தை பாராட்டி உள்ளது. ஸ்டாலினின் குற்றச்சாட்டு அவரது சந்தர்ப்பவாத அரசியலை காட்டுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்