Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா குறித்த தகவல்களை எந்த நேரத்திலும் என்னை தொடர்புக்கொண்டு தெரிவிக்காலாம்: முதல்வர்களிடம் மோடி பேச்சு

ஏப்ரல் 11, 2020 09:07

புதுடெல்லி: கொரோனா குறித்து பரிந்துரைகளை எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என முதல்வர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 7,400க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 239 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் உள்ள ஊரடங்கு வரும் ஏப்.,14ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கொரோனா கட்டுப்படுத்தல் தொடர்பாகவும் ஊரடங்கினை நீட்டிப்பது குறித்தும் பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில், ஊரடங்கு குறித்து முதல்வர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். பஞ்சாப், ஒடிசா மாநிலங்கள் ஏற்கனவே ஊரடங்கினை நீட்டித்துள்ள நிலையில், மற்ற பல மாநிலங்களும் நீட்டிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

ஆலோசனைக்கூட்டத்தில் பிரதமர் மற்றும் அனைத்து முதல்வர்களும் மாஸ்க் அணிந்து பங்கேற்றனர். அவர்களுடன் மோடி பேசியதாவது: நான் வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேரமும் அதாவது எந்த நேரத்திலும் பணியில் தான் இருக்கிறேன். எந்த முதலவரும் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு பேசலாம், கொரோனா குறித்து பரிந்துரைகளை வழங்கலாம். நாம் தோளோடு தோள் கொடுத்து ஒன்றாக நிற்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

தலைப்புச்செய்திகள்