Sunday, 16th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குமரியில் பரிசோதனைக்கு செல்ல மறுத்த குடும்பத்தில் குழந்தைகள் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஏப்ரல் 10, 2020 01:21

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பரிசோதனைக்குச் செல்ல மறுத்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால், குமரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 பேராக உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட, மற்றும் கரோனா வார்டில் ஏற்கெனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 4 பேர் டெல்லி மத மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள்.

இதில் இரு பெண்களும், 7 வயதிற்குட்பட்ட இரு சிறுவர்களும் அடங்குவர். மேலும் சிகிச்சை பெற்று வரும் விமான நிலைய ஊழியரின் தாய், தந்தை, தம்பி ஆகியோரும், தேங்காய்ப்பட்டணத்தை சேர்ந்தவரின் மனைவி ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று ஒரே குடும்பத்தில் பலருக்கு வந்திருப்பதைத் தொடர்ந்து 3-ம் கட்டத்திற்கு பரவியிருக்குமோ? என்ற சந்தேகம் சுகாதாரத்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மேலும் 50-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. இந்நிலையில் கைபேசி செயலி மூலம் விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஆலோசனை நடத்தினார்.

அப்போது விவசாயப் பொருட்கள் கிடைப்பது குறித்தும், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சமூக இடைவெளி கடைபிடிப்பது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

தலைப்புச்செய்திகள்