Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாயமான கொரோனா பாதித்த டெல்லி வாலிபர்; 7 தனிப்படைகள் தேடுகிறது

ஏப்ரல் 10, 2020 06:46

விழுப்புரம்: விழுப்புரத்தில், கொரோனா பாதிப்புடன் மாயமான, டில்லி வாலிபரை பிடிக்க, ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனன.

டில்லி பட்டேல் நகரைச் சேர்ந்தவர் நிதின் சர்மா, 30; ஓட்டல் மேனேஜ்மென்ட் முடித்து, வேலை தேடி, கடந்த டிசம்பர் மாதம் புதுச்சேரி வந்தார். அங்கு காரை திருடிச் சென்றபோது விபத்து ஏற்படுத்திய வழக்கிலும், புதுச்சேரி கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கிலும், கைது செய்யப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்குகளில், மூன்று மாத சிறை தண்டனை முடிந்து, கடந்த 16ம் தேதி விடுதலையான இவர், விழுப்புரத்தில் உள்ள வடமாநில டிரைவர்களுடன் ஒரு வாரம் தங்கியிருந்தார்.

வெளி மாநிலத்தவர் பட்டியலில் இருந்த நிதின் சர்மா, கடந்த 6ம் தேதி, விழுப்புரம் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நிதின் சர்மாவிற்கு கொரோனா தொற்று இல்லை என அனுப்பப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் வந்த பரிசோதனை முடிவில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிதின் சர்மாவை தேடும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி., சங்கர் தலைமையில், ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.விழுப்புரம் நகரம் மற்றும் சோதனைச் சாவடிகளில், நிதின் சர்மா போட்டோவுடன் தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்