Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் கொரோனா அவசர சிகிச்சைப் பிரிவாக மாற்றப்படும் ரயில் பெட்டிகள்

ஏப்ரல் 07, 2020 08:46

திருச்சி: கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பிரத்யேக வசதிகளுடன் சிகிச்சை அளிப்பதற்காக, படுக்கை வசதி கொண்ட ரயில்பெட்டிகளை அவசர சிகிச்சைப் பிரிவாக மாற்றும் பணிகள் திருச்சி பொன்மலை பணிமனைஇ கிராப்பட்டி யார்டில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், சரக்கு ரயில் சேவையைத் தவிர இதர ரயில்களின் சேவை ஏப்ரல் 14- ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்தந்த மண்டலங்கள் மற்றும் கோட்டங்களுக்குள்பட்ட ரயில்கள் சம்பந்தப்பட்ட பணிமனைகள், யார்டில் நிறுத்தப்பட்டு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பணிமனைகள்இ யார்டுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரயில்களின் பெட்டிகளை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏற்ப மாற்றுமாறு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தெற்கு ரயில்வேயில் 473, வடக்கு ரயில்வேயில் 370,  மத்திய ரயில்வேயில் 482, கிழக்கு ரயில்வேயில் 208, மேற்கு ரயில்வேயில் 410 என மொத்தம் 16 மண்டலங்களில் மட்டும் 5000 படுக்கை வசதி கொண்ட ரயில்பெட்டிகளை கொரோனா வைரஸ் அவசர சிகிச்சைப் பிரிவாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரயில்பெட்டிகளின் கேபின்களின் இருபக்கங்களிலுள்ள மேல்,  நடு படுக்கைகளை அகற்றிவிட்டு,  2 தாழ்தளப் படுக்கைகளாக மாற்றியமைக்கப்படுகிறது. அத்துடன் இரண்டு ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஜன்னல்களில் கொசுவலைகள், மருந்துப் பொருள்கள் வைக்கும் அலமாரிகள், செல்லிடப் பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கான மின்னேற்றும் அமைப்பு உள்ளிட்ட பிரத்யேக வசதிகளுடன் தயாராகி வருகிறது.

பொன்மலை, கிராப்பட்டியில், தெற்கு ரயில்வேயின் 6 கோட்டங்களுக்குள்பட்ட பகுதிகளுக்காக, திருச்சி பொன்மலை, கிராப்பட்டி, நாகர்கோவில், சென்னை பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருச்சி பொன்மலை பணிமனையில் ரயில் பெட்டிக்கு 18 படுக்கைகள் வீதம், 100-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகளில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்னும் சில நாள்களில் இப்பணிகள் நிறைவடையவுள்ளது. அதன்பிறகு, கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் இந்த கொரோனா வைரஸ் ரயில் பெட்டிகள் உதவிடும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

தலைப்புச்செய்திகள்