Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 621 ஆனது : பலி 6 ஆக உயர்வு

ஏப்ரல் 07, 2020 05:55

சென்னை : தமிழகத்தில், மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 6 ஆனது.
சென்னையில் நிருபர்களை சந்தித்த சுகாதார செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது :
வீட்டுக்கண்காணிப்பில் இருப்பவர்கள்: 91,851 பேர்
அரசின் தனிமை முகாம்களில் இருப்பவர்கள்: 205 பேர்
1,475 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் பரவியுள்ளது.  50 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 48 பேர் டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவர். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட வாரியாக

தமிழகத்தில் மொத்தம் 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 110 பேரும், கோயம்புத்தூரில் 59 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து,
திண்டுக்கல்-45,
திருநெல்வேலி-38,
ஈரோடு-32,
திருச்சி-30,
நாமக்கல்-28,
ராணிப்பேட்டை-25,
செங்கல்பட்டு-24,
கரூர்-23,
தேனி-23,
மதுரை-19,
விழுப்புரம்-16,
கடலூர்-13,
சேலம், திருவள்ளூர், திருவாரூரில் தலா-12,
திருப்பத்தூர், விருதுநகர், தூத்துக்குடி, நாகப்பட்டிணமில் தலா-11,
திருவண்ணாமலை-9,
தஞ்சாவூர்-8,
திருப்பூர்-7,
கன்னியாகுமரி, காஞ்சிபுரத்தில் தலா-6,
சிவகங்கை, வேலூரில் தலா-5,
நீலகிரி-4,
ராமநாதபுரம், கள்ளக்குறிச்சியில் தலா-2,
அரியலூர், பெரம்பலூரில் தலா ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று, தேனி மற்றும் விழுப்புரத்தில் தலா ஒருவர் உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த 75 வயது முதியவர், சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் ஏப்.,3 ல் அனுமதிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா உள்ளது உறுதியாகியுள்ளது. அதேபோல் சென்னையை சேர்ந்த 60 வயது முதியவர், கொரோனா பாதிப்புடன் கடந்த 1ம் தேதி ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று (ஏப்.,5) அதிகாலை 1.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது பெண் நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்