Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எங்களுக்கும் நலத்திட்ட உதவி வேண்டும்: நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை

ஏப்ரல் 03, 2020 03:17

சென்னை: கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் நாடக கலைஞர்கள் சங்கத்தினர் தங்களுக்கும் நலத்திட்ட உதவிகளை அறிவிக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியாவில் வரும் 14ம் தேதி வரை 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க மக்கள் கூட்டம் சேரும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக கோவில் திருவிழாக்கள் உட்பட பல நிகழ்ச்சிகளை நம்பியுள்ள நாட்டுப்புற மற்றும் நாடகக் கலைஞர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் நாட்டுப்புற மற்றும் நாடகக் கலைஞர்கள் சங்கத்தின் ஆலோசகரான பேராசிரியர் காளிஸ்வரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாவது: ஏற்கனவே  புயல், மற்றும் தேர்தல் காரணமாக நாட்டுப்புற கலைஞர்களும் நாடகக் கலைஞர்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். 

இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவால் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் கலைஞர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அறிவித்தது போன்று நாட்டுப்புற மற்றும் நாடகக் கலைஞர்களுக்கும் உதவி திட்டங்களை அறிவிக்க வேண்டும். இவ்வாறு தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்