Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போக்குவரத்து வசதி இல்லாததால் மருந்துகள் தட்டுப்பாடு

ஏப்ரல் 02, 2020 07:34

கும்பகோணத்தில் உள்ள மருந்துக் கடைகளில் உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்ட அனைத்து மருந்துகளும், 25 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்த மருந்துகள் இன்னும் 3 நாட்களில் தீர்ந்துவிடும்.

உயிர்காக்கும் மருந்துகள் இன்றி நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் போக்குவரத்து மற்றும் கொரியர் வசதி இல்லாததே என்று மருந்துக் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு விற்பனை செய்ய அனுமதி அளித்தது போன்று உயிர்க்கும் மருந்துகளை அனைத்து விற்பனை கடைகளிலும் கிடைக்கச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் மருந்துக் கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல மருந்துக் கடைகள் மருந்து மாத்திரைகள் இருப்பு இல்லாததால் மூடப்பட்டுள்ளன. நீரிழிவு நோய்க்கான பென்சுலின் மற்றும் இதய நோய்களுக்கான முக்கிய உயிர் காக்கும் மருந்துகள் இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.

மருந்து தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் மொத்த விற்பனையாளர்கள் தங்கள் நிறுவனத்தை மூடிவிட்டனர். மேலும் போக்குவரத்து கொரியர் வசதி இல்லாததால், மருந்துகள் கிடைக்கவில்லை. மேலும் தற்போது 25 சதவீதம் மட்டுமே மருந்துகள் இருப்பு உள்ளதாகவும் இது அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு மட்டுமே உள்ளது என கூறுகின்றனர் மருந்துகடை ஊழியர்கள்.

தலைப்புச்செய்திகள்