Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாகையில் 144 தடை உத்தரவை மீறிய 150 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

மார்ச் 29, 2020 11:57

நாகை: நாகையில் 144 தடை உத்தரவை மீறிய 169 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 150 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆதலால் தேவையின்றி பொதுமக்கள் வெளியில் நடமாடக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் 144 தடை உத்தரவை மீறி சாலையில் மோட்டார்சைக்கிளில் சுற்றித்திரிந்ததாக நாகை மாவட்டம் முழுவதும் 169 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் 150 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறியவர்கள் மீது 548 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுகுற்றங்களை தடுக்கும் வகையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மது கடத்திய 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் முககவசம் இல்லாமல் சாலைகளில் செல்பவர்களை போலீசார் எச்சரித்து அறிவுரை வழங்கி வருகின்றனர். மேற்கண்ட தகவலை நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் கூறினார்.

இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 62 பேரை போலீசார் கைது செய்தனர்.

தலைப்புச்செய்திகள்