Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகளிர் கடன் வட்டி தொகை வசூல் செய்வதை தள்ளி வைக்க வேண்டும்: அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி கோரிக்கை

மார்ச் 25, 2020 05:54

சென்னை: கொரோனா பதற்றம் தனியும் வரை சிறு, குறு தொழில் முனைவோர் மகளிர் கடன் வட்டி தொகையை வசூல் செய்வதை மத்திய மாநில அரசுகள் தள்ளி வைக்க வேண்டும் என அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி தலைவர் முத்து ரமேஷ் நாடார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலக அளவில் கொடும் நோயாகவும், பெருந்தொற்று நோயாகவும் உருவாகி உள்ள கொரோனா வைரஸ் நோய் மருத்துவ துறையில் மட்டுமின்றி, பொருளாதார அடிப்படையிலும் மதிப்பிட முடியாத பாதிப்புகளையும், இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்நோயின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற இந்திய அரசும்,தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
ஊரடங்கு உத்தரவு,தொழில் நிறுவனங்கள் இயங்கக் கூடாது. போன்ற நெருக்கடியான நடவடிக்கைகளால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகப் பெரிய அளவில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒரு வேளை உணவிற்கே கஷ்டப்படும் இவ்வேளையில் இவர்கள் வீட்டு வாடகை,கடை வாடகை,சுய கடன்,மகளீர் சுய உதவி கடன்,கல்விக்கடன், தொழில் கடன் என தாங்கள் செலுத்த வேண்டிய எவ்வித கடன் தொகையையும் வட்டி தொகையும் திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலை உள்ளார்கள்.

ஏழை நடுத்தர மக்களின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு கொரோனாவால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் அமைப்பு சாரா சிறு.குறு.மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், மற்றும் தொழிலாளர்கள். மகளிர் சுய உதவிக்குழு மற்றும் மகளிர்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள்.பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செலுத்த வேண்டிய கல்வி கட்டணங்கள் வசூல் செய்யப்படுவதை கொரோனா பதற்றம் தனியும் வரை கடன் பெற்றவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு கடன் மற்றும் வட்டி தொகையை வசூல் செய்வதை தள்ளி வைக்குமாறு இந்திய அரசையும், தமிழக அரசையும் அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி வேண்டிக்கேட்டுக்கொள்கிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்