Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிறுநீரக நோய்கள் தடுப்பு முறை ஆரம்பநிலை சிகிச்சை முகாம்

மார்ச் 12, 2020 11:32

திருச்சி: உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு  திருச்சி  ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய்கள் தடுப்பு முறை மற்றும் ஆரம்பநிலை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் சிறுநீரக நோய்கள் தடுப்பு முறை மற்றும் ஆரம்பநிலை சிகிச்சைக்கான முகாம் ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமில் சிறுநீரக பாதிப்புகளான சிறுநீரில் புரதசத்து கசிவு, ரத்த டயாலிசிஸ், பெரிடோனியல் டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான ஆலோசனை, தற்காலிக சிறுநீரக செயலிழப்பு, நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு  மற்றும் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், ரத்தம் கலந்து சிறுநீர் போவது, சிறுநீரில் கிருமித் தொற்று, சிறுநீரக கல் தொந்தரவு, கட்டுப்பாடின்றி சிறுநீர் கசிவு, சிறுநீரகப் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
 
சிறுநீரக சிறப்பு மருத்துவர் மற்றும் மாற்று சிறுநீரக மருத்துவ ஆலோசகர் டாக்டர் கந்தசாமி, டாக்டர் பாலமுருகன், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு இலவச ஆலோசனை வழங்குகினர்.  மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் யூரியா கிரியேட்டின், யூரின் ரொட்டின், ரேண்டம் பிளட் சுகர் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டது. 

தேவைப்படும் நபர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது.  இம்முகாமில் 75க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமில் முதலமைச்சரின்  விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சைக்காக 25 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். முகாம் ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்டீபன் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்