Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொள்ளையடிக்கப்பட்ட 3 உலோக சிலைகள் பறிமுதல்

மார்ச் 12, 2020 10:02

கும்பகோணம் அருகே திருப்புறம்பயம் சீனிவாசப் பெருமாள் கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 3 உலோக சிலைகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக பெண் உள்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.

கும்பகோணம் அருகே திருப்புறம்பயம் சீனிவாசப் பெருமாள் கோவில் நூற்றாண்டுகளக்கும் மேல் பழமையான கோவிலாகும். இக்கோவிலின் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த நுற்றாண்டுகள் பழமையான சீனிவாசப் பெருமாள், தாயார் மற்றும் சேனாதிபதி சிலைகள் கடந்த மாதம் 8 ஆம் தேதி கொள்ளையடிக்கப்பட்டன.

கோவிலின் பின்பக்க மதில் சுவர் ஏறிக் குதித்த கொள்ளையர்கள், கோவில் மணி ஒலித்து விடக் கூடாது என்பதற்காக மணிகளில் கிரீசை தடவி நூதன முறையில் சிலைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது தொடர்பாக அர்ச்சகசர் பராங்குசம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சுவாமிமலை காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ராமலிங்கம், அவரது மனைவி ராசாத்தி, மகன் கமல், மற்றும் மெல்வின் சகாய ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

இதில் ராமலிங்கத்தை ஏற்கனவே கைது செய்துள்ள நிலையில் மற்ற 3 பேரை நேற்று கைது செய்த போலீசார் 3 உலோக சிலைகளையும் கைப்பற்றினர். ராமலிங்கம் ஏற்கனவே சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடையது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மற்ற 3 பேரையும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கச கொண்டு சென்றனர்.
 

தலைப்புச்செய்திகள்