Sunday, 16th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற 5 வெளிநாட்டினர் வெளியேற உத்தரவு

மார்ச் 04, 2020 06:37

புதுடெல்லி: மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில், “குடியேற்றத்துறை (பிஓஐ) அளித்துள்ள தகவலின்படி, சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் விசா விதிமுறைகளை மீறியதற்காக 5 வெளிநாட்டினர் இந்தியாவை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்” என்று கூறியுள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் 11-ம் தேதி நிறைவேறியது. இந்த சட்டத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தது. இந்த சட்டம் முஸ்லிம்கள் உள்ளிட்ட இந்திய மக்களின் குடியுரிமையை பாதிக்காது என மத்திய அரசு விளக்கம் அளித்தாலும் அதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தொடர்கிறது. அதேவேளையில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்தும் பரவலாக பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்