Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிராம்பட்டினம் பகுதியில் வெள்ளி மீன்கள் வரத்து அதிகரிப்பு: ஒரு  கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை

மார்ச் 03, 2020 10:24

தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் பகுதியில் வெள்ளி மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது, ஒரு கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியான ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுக கிட்டங்கி தெரு ஆகிய துறைமுக பகுதி மீனவர்கள் தொடர்ந்து வெள்ளி மீன்களை பிடிப்பதற்கு மட்டும் அதற்குள்ளான வலைகளை பயன்படுத்தி கடலுக்கு சென்று மீன்களை பிடித்து வருகின்றன.

ஆண்டு முழுவதும் இந்த மீன்கள் அகப்படும். மழைகாலத்தில் அதிகமாக அகப்படும். ஆனால் தற்போது வெள்ளிமீன்கள் வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாதத்திற்கு முன் 1 கிலோ ரூ.350 விற்பனையாகியது. இப்போது 1கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை ஆகின்றன. இங்கு பிடிப்படும் மீன்கள் கேரளாவிற்கு ஏற்றுமதியாகிறது. உள்ளூரிலும் இந்த மீன்களை பொதுமக்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த மீன்கள் வரத்து அதிகரித்து உள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து மீனவர்கள் கூறுகையில்:-

இந்த மீன்களுக்கு பல்வேறு பெயர்கள் உண்டு. வெள்ளிமீன், தேசப்பொடி, வெள்ளைபொடி பொடி மீன் கேரளாவில் மட்லீஸ் என பல்வேறு பெயர்களை வைத்து அழைகின்றார்கள். கேரளாவில் இந்த மீனுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் இங்கு பிடிப்படும் மீன்கள் ஏஜண்ட் மூலம் கேரளாவுக்கு ஏற்றுமதியாகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் வெள்ளிமீன்களை வைத்து மீன் குழம்பு வைக்கின்றனர் என்று கூறினார்.

தலைப்புச்செய்திகள்