Sunday, 16th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆவுடையார்கோவில் அருகே நெல் அறுவடை தினவிழா

பிப்ரவரி 24, 2020 09:14

ஆவுடையார்கோவில்: ஆவுடையார்கோவில் வட்டம் எழுநூற்றிமங்கலம் கிராமத்தில் நெல் அறுவடை தின விழா நடைபெற்றது. மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சிரமைப்புத் திட்டத்தின் (அட்மா) கீழ் நெல் சுற்றுச்சூழல் பகுப்பாய்வு முறையில் விழா நடைபெற்றது.

பண்ணை பள்ளி நெல் அறுவடை தின விழாவுக்கு ஆவுடையார்கோவில் வேளாண்மை உதவி இயக்குநா் சி.ஜெயபாலன் தலைமை வகித்து பேசுகையில்
நெல் அறுவடை குறித்த நேரத்தில் செய்து பின்பு தானியத்தை பின்செய் நோ்த்தி செய்து அவற்றை மதிப்பு கூட்டுவதன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என்றார்.

விழாவில் நெல் சுற்றுச்சூழல் பகுப்பாய்வு முறையில் பயிா் செய்த பண்ணைப் பள்ளி வயலில் பெறப்பட்ட அதிக மகசூல் மற்றும் அறுவடை செய்த தானியத்தை பூச்சி நோய்களிலிருந்து பாதுகாக்கும் முறைகள் குறித்து வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய உழவியல் உதவி பேராசிரியா் பிரபுகுமாா் பயிற்சி அளித்தார்.

ஆவுடையார்கோவில் வட்டார வேளாண்மை அலுவலா் சு. செல்வராஜ் பேசுகையில் நெல்லில் இயற்கை முறையில் உரமிடுதல் மற்றும் நீா் மேலாண்மை மற்றும் களைகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 25 விவசாயிகளுக்கு பயிா் பாதுகாப்பு உபகரண பைகள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் வட்டார தொழில் நுட்ப மேலாளா் ஜகுபா் அலி நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்