Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடங்கியது

பிப்ரவரி 22, 2020 02:29

திருச்சி: தமிழக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க கண்காட்சி ‘‘முத்திரை பதித்த மூன்றாண்டு முதலிடமே அதற்கு சான்று’’ என்ற தலைப்பில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமை வகித்தார்.

கண்காட்சியை ரிப்பன் வெட்டி அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் வளர்மதி ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். கண்காட்சியில் அரசின் நலத்திட்டங்கள் சாதனைகள்  புதிய திட்டங்கள் தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்வு  மீனவர்களுக்கு தனி வீட்டுவசதி திட்டம் 50 சதவீத மானியத்தில் பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை இருமடங்காக உயர்வு பசுமை வீடு  பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி  சைக்கிள்கள்  சீருடைகள் பாடப்புத்தகங்கள்  திருமண நிதி உதவியுடன் கூடிய தாலிக்கு 8 கிராம் தங்கம் விலையில்லா கறவைமாடுகள்  வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்  அம்மா மருந்தகம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் திருச்சி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.

மேலும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் மூலம் மூன்றாண்டு சாதனை தொகுப்பும் ஒளிபரப்பபட்டன.
புகைப்பட கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்