Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எம்.ஜி.ஆர்., சிலை சட்டைக்கு காவி சாயம்: திருவண்ணாமலை அருகே பரபரப்பு

பிப்ரவரி 20, 2020 11:12

திருவண்ணாமலை: திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசிய பிரச்னை இதுவரை ஓயாத நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலையில் சட்டைக்கு காவி சாயம் பூசப்பட்டிருப்பது திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவருக்கு அண்மையில் பா.ஜ.க., காவி சாயம் பூசியது சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு பல்ேவறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்பும் எழுந்தது.

ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் கூட காவி சாயம் பூசப்பட்ட திருவள்ளுவர் படத்தை ட்விட்டரில் பகிர்ந்தார். இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த ட்விட்டை வெங்கையா நாயுடு நீக்கியிருந்தார். ஆனாலும், தமிழக பா.ஜ.க.,வினர் அவ்வப்போது காவி சாயம் பூசப்பட்ட திருவள்ளுவர் படத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது திருவண்ணாமலை அருகே கருங்காலி குப்பத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டிருப்பது பரபரப்பாகி உள்ளது. பொதுவாக எம்.ஜி.ஆர்., சிலைகளில் சட்டை வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். திருவண்ணாமலை கருங்காலி குப்பத்தில் 30 ஆண்டுகளாக இருக்கும் எம்.ஜி.ஆர்., சிலையும் அதேபோல்தான் இருந்து வந்தது.

தற்போது திடீரென எம்.ஜி.ஆர்., சிலையில் சட்டைக்கு காவி சாயம் பூசப்பட்டிருப்பதால் அ.தி.மு.க.,வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்