Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாக்காளர் அடையாள அட்டை ஆதார் எண்ணுடன் இணைகிறதா?:

பிப்ரவரி 19, 2020 12:19

புதுடெல்லி: தேர்தல் நடைமுறை சீர்திருத்தத்தின் முக்கிய பணியாக வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு வழங்க முடிவு எடுத்துள்ளது. இதற்கான தீர்மானத்தை தயார் செய்யும் பணியில் மத்திய சட்டத் துறை அமைச்சகம் இறங்கி உள்ளது. தீர்மானத்தை தயார் செய்த பிறகு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட உள்ளது. இது தேர்தல் நடைமுறை சீர்திருத்தத்தில் முக்கிய பணியாக பார்க்கப்படுகிறது. 

இதில் உள்ள சிக்கலை களைய ஆதார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதால் போலியான வாக்காளர் அட்டைகளை அடையாளம் காண முடியும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அத்துடன் உள்நாட்டில் புலம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் இடத்தியிலேயே வாக்களிக்க இந்த சீர்திருத்தம் வழிவகை செய்யும். ஆதார் இணைப்பு கட்டாயம் அல்ல என்று கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தது. இந்த தடையை நீக்கும் விதமாக சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சகத்தை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்