Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சர்ச்சையாகும் எம்பி ஆர் எஸ் பாரதியின் ஆணவப் பேச்சு

பிப்ரவரி 17, 2020 12:57

சென்னை: எச் ராஜா பார்ப்பன பொறுக்கி நாய், அந்த பொறுக்கி நாய் திராவிட கழகம் ஒழிய வேண்டும் என சொல்வதற்கு எப்படி தைரியம் வந்தது” என்றும் செய்தியாளர் குறித்தும் தலித் சமூகத்தினர் குறித்தும் மிகவும் இழிவாக திமுக எம்பி ஆர் எஸ் பாரதி விமர்சித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
.
“டிவி சேணல்கள் மும்பை விபச்சார விடுதிகள் போல் இயங்குகிறது. உயர் நீதிமன்றத்தில் ஆதி திராவிடர் உள்ளிட்ட பிரிவினர் நீதிபதியாகப் பதவி ஏற்றது திமுக போட்ட பிச்சை. கோயில்களில் திமுகவினர் போடும் காணிக்கை பணத்தில்தான் பூசாரிகளுக்கு வருமானம் கிடைக்கிறது. எச் ராஜா பார்ப்பன நாய்க்கு எப்படி தைரியம் வந்தது” எனச் சர்ச்சைக்குரிய வகையில் திமுக எம்பி ஆர் எஸ் பாரதி பேசியுள்ளார். 

கலைஞர் வாசக வட்டம் சார்பாகச் சமீபத்தில் ஒரு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக அமைப்புச் செயலாளரும், அக்கட்சியின் எம்பியுமான ஆர் எஸ் பாரதி: இவ்வாறு பேசியுள்ளார். திராவிட கழகம் ஒழிந்தால்தான் நாடு நன்றாக இருக்கும் என்றும் கூறுகிறான். இப்படி அந்த பார்ப்பன நாய் பேசுவதற்கு என்ன காரணம்? எப்படி இந்த தைரியம் அவனுக்கு வந்தது?. 

வட மாநிலத்தினர் எல்லாரும் முட்டாள்கள். அறிவே இல்லாதவர்கள். இதை நான் வெளிப்படையாகவே கூறுகிறேன். மகாராஷ்டிராவில் ஹரிஜன் பிரிவை சேர்ந்த ஒருவர்கூட இப்போதுவரை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியமர்த்தப்படவில்லை. 

எதோ நாம் இந்து மத எதிரியைப் போல காண்பிக்கப்படுகிறோம். கோயிலுக்குச் சென்று பூசாரி தட்டில் நம்மைக் குற்றம் சொல்பவன் எல்லாம் 5 ரூபாய் போடுகிறான். ஆனால் திமுக வட்டச் செயலாளர் கோயிலுக்குச் சென்றால் 100 ரூபாய் போடுகிறான், பெருமைக்காக இதைச் செய்கிறான். அதேபோல் கவுன்சிலர் 500 ரூபாயும், எம்எல்ஏ ஆயிரம் ரூபாய் போடுவான். 

முன்னாள் அமைச்சர் நேரு போன்றவர்கள் சென்றால் பூசாரி தட்டில் 5 ஆயிரம் ரூபாய் போடுவார்கள். நம்ம போடும் பணத்தில்தான் பூசாரி வாழ்கிறான். இந்து மதமே இதனால்தான் பரவிக் கொண்டே வருகிறது. செய்தி சேணல்களில் பணிபுரிபவர்களைப் போலக் கேவலமானவர்கள் உலகத்திலே யாருமில்லை. மும்பையில் உள்ள விபச்சார விடுதிகளைப் போல் சேணல்களை இயக்குகிறார்கள். பணத்திற்காக எதை வேண்டுமானாலும் கிளப்பி விடுவார்கள். 

இதைத் தடுத்து நிறுத்த கலைஞர் வாசக வட்டம் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். ஊடகத்தினரைத் தொடங்கி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சொந்தக் கட்சிக்காரர் என அனைவரையும் இழிவாகப் பேசிய ஆர் எஸ் பாரதி பேச்சை பல்வேறு தரப்பினர் கண்டித்து வருகின்றனர். 

தலைப்புச்செய்திகள்