Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குப்பை கொட்டும் இடம் சீரமைப்பு விளையாட்டு மைதானமாக மாற்றம்

பிப்ரவரி 14, 2020 08:39

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி டிவிஷன் 24 சாமுண்டிபுரம் திருநீலகண்டர் வீதியில் இருந்த குப்பை கொட்டும் இடம் சீரமைக்கப்பட்டு குழந்தைகள் விளையாடும் மைதானமாக மாற்றியமைக்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி டிவிஷன் 24 சாமுண்டிபுரம் திருநீலகண்டர் வீதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வந்த குப்பை கொட்டும் பகுதி மின்சார டிரான்ஸ்ஃபார்மர் மற்றும் மாநகராட்சி தண்ணீர் தொட்டியும், குப்பை கொட்டும் இடத்திற்கு நடுவில் இருந்து வந்தது.

இதனால் மிகுந்த துர்நாற்றமும், சுகாதாரக் கேடும் அப்பகுதியில் ஏற்பட்டது. மின் ஊழியர்கள் பணி செய்ய இயலாத சூழ்நிலையும் நிலவி வந்தது. எனவே, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நேற்று காலை முதல் மதியம் வரை தனியார் பொக்லைன் இயந்திரம் கொண்டு திருப்பூர் மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு குழந்தைகள் விளையாடுவதற்கு மைதானம் தயார் செய்து கொடுக்கப்பட்டது.

இதில், மண்டல தலைவர் சே.பூபதி, டிவிஷன் தலைவர் ப.ரத்தினவேலு ஆகியோர் கலந்துகொண்டு பணியாற்றினர். இப்பணிகளை மாவட்ட தலைவர் ரவிக்குமார் நேரில் பார்வையிட்டு பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்பகுதி பொது மக்களும் ஆவலோடு பங்கேற்று இச்செயலுக்கு வரவேற்பளித்தனர்.

தலைப்புச்செய்திகள்