Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவேகானந்தருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும்: சத்ய ஞானானந்தா

பிப்ரவரி 04, 2020 11:06

1897 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்தில் விஜயம் செய்து சொற்பொழிவாற்றியதை நினைவுகூறும் வகையில்  தமிழக அரசு விவேகானந்தருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்று ஆன்மீகவாதிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வலியுறுத்தியுள்ளனர்.

கும்பகோணத்தில் கடந்த 1897 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3, 4, மற்றும் 5 ஆகிய 3 நாட்கள்  தங்கி சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்பொழிவாற்றினார். இதனை நினைவு கூறும் நிகழ்ச்சி ஸ்ரீ மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சோழமண்டல ஸ்ரீவிவேகானந்தர் சேவா சங்கம் சார்பில் நடைபெற்றது.

அப்போது வாழ்வில் இளைஞர்கள் எழுச்சியுற விவேகானந்தர் ஆற்றிய உரைகள் குறித்து ஆன்மீகவாதிகள் மாணவர்களுக்கு விளக்கினர்.மேலும் பள்ளிக் குழந்தைகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் விவேகானந்தர் போன்று வேடமிட்டு அணிவகுத்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட ராமகிருஷ்ணா மிஷன் நிர்வாகி சத்ய ஞானானந்தா, விவேகானந்தர் கும்பகோணம் விஜயம் செய்துள்ளதை நினைவு கூறும் வகையில்  விவேகானந்தருக்கு மணிமண்டபம் கும்பகோணத்தில் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொண்டார்.

தலைப்புச்செய்திகள்