Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பசுக்களுக்கு இன்று கோ பூஜை

ஜனவரி 16, 2020 09:08

மாட்டுப் பொங்கலையொட்டி கும்பகோணம் அருகேயுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தானத்தில் உள்ள கோசாலையில் பராமரிக்கப்பட்டு வரும் 700க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு இன்று கோ பூஜை செய்யப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் கும்பகோணம் அருகேயுள்ள கோவிந்தபுரம் விட்டல் சமஸ்தானம் என்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது இந்த கோவிலில் உள்ள கோசாலையில் சுமார் 700க்கும் மேற்பட்ட காளைகள் பசுக்கள் உள்ளன பகவான் கிருஷ்ணர் மெய்த்த பசு வகைகள் மற்றும் உத்தரபிரதேச மாநிலம் மதுரா பிருந்தாவனம் ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட உயர் ரக பசுக்கள் இந்த கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இன்று மாட்டுப் பொங்கலையொட்டி இந்த கோசாலையில் உள்ள 700க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு கோ பூஜை செய்யப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பசுக்களுக்கு வஸ்திரம் அணிவித்து மலர் தூவி வழிபட்டனர்.

 சிலர் இந்த கோ சாலைக்கு பசுக்களை தானமாக வழங்கி சர்க்கரை பொங்கலை வழங்கி வழிபாடு செய்தனர் காலை முதல் நடைபெற்று வரும் இந்த கோ பூஜையில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த பக்தர்களும் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
 

தலைப்புச்செய்திகள்