Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ககன்யான் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி

ஜனவரி 16, 2020 04:00

மங்களூரு: இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் இந்த மாதத்தில் பயிற்சிக்காக ரஷ்யா அனுப்பப்படுவார்கள் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் விண்வெளிப் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 4 பேருக்கும் ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக இம்மாதத்தில் ரஷ்யா செல்லும் அவர்களுக்கு 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2022ம் ஆண்டு செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள ககன்யான் திட்டத்திற்கு மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்