Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஈரோட்டில் ரூ.20 கோடி ஜவுளி துணிகள் தேக்கம்

டிசம்பர் 25, 2019 04:50

ஈரோடு: ஈரோடு சுற்று வட்டாரத்தில் வீரப்பன்சத்திரம், அசோக புரம், சூளை, மாணிக்கம் பாளையம், லக்காபுரம், சித்தோடு உள்பட பல பகுதிகளில், 30 ஆயிரத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்குகிறது.இந்த விசைத்தறிகள் மூலம் ரயான், காட்டன் காடா துணி தயாரிக்கப்படுகிறது. ரயானில், 120, 140 கிராம் பிளைன், 110, 120, 140 கிராம் ஹை-ட்விஸ்ட், 70, 90, 100 கிராம் பிளைன், 33 இன்ச் காடா துணிகள் தயாரிக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் ரயான் நூல் ஒரு கிலோ 182 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பிறகு விலை குறைந்து சில மாதங்களாக 152 ரூபாயாக நீடிக்கிறது. நூல் விலை குறைந்த போதிலும், ரயான் துணி விலை வீழ்ச்சியால் நஷ்டமடைந்து வருவதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், குடியுரிமை சட்டம் தொடர்பாக வட மாநிலத்தில் போராட்டம் நடைபெற்று வருவதால், ரயான் துணிகளுக்கு டையிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, ஈரோட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு ரயான் துணி அனுப்புவது நிறுத்தம் காரணமாக, கடந்த 10 நாட்களில் ரூ.20 கோடி மதிப்புள்ள துணிகள் குடோன்களில் தேக்கமடைந்துள்ளது.

டையிங் ஸ்தம்பிப்பு காரணமாக ஈரோட்டில் இருந்து ரயான் துணி ஆர்டர் குறைந்து விட்டதால், குடோன்களில் ரூ.20 கோடி மதிப்பிலான துணி தேக்கமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. நூல் விலையை விட உற்பத்தி விலை கூடுதலாகி விட்டது. துணி விலை வீழ்ச்சியால் நெசவாளர்கள் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொடர் வீழ்ச்சியால் வேலையிழக்கும் பாதிப்பும் ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தலைப்புச்செய்திகள்