Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமருடன் கலந்துரையாட தமிழகத்தில் இருந்து 5,000 மாணவர்கள் விண்ணப்பம்

டிசம்பர் 22, 2019 07:57

சென்னை: பிரதமர் மோடியுடன் நேரில் கலந்துரையாட தமிழகத்தைச் சேர்ந்த 5,000 மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

பொதுத்தேர்வை மாணவர்கள் பயமின்றி எழுதும் வகையில் 2020ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி டெல்லியில் Pariksha Pe Charcha 2020 நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் இடையே கலந்துரையாட உள்ளார். இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 

அந்த வகையில் பிரதமர் மோடியுடன் கலந்துரையாட தமிழகத்தில் கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுரைகளை சமர்ப்பிக்க நாளை கால அவகாசம் நிறைவு பெறும் நிலையில், இதுவரை 5,000 மாணவர்கள் மோடியுடன் கலந்துரையாட விண்ணப்பித்துள்ளனர். இதில் இருந்து 66 பேர் தேர்வு செய்யப்பட்டு பிரதமர் மோடியை சந்திக்க அழைத்து செல்லப்பட உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்