Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக இந்திய கடற்படையை சேர்ந்த 7 அதிகாரிகள் கைது

டிசம்பர் 20, 2019 10:56

விஜயவாடா: பாகிஸ்தானோடு தொடர்புடைய நபர்களுக்காக உளவு வேலை பார்த்ததாக இந்திய கடற்படையை சேர்ந்த 7 அதிகாரிகள் மற்றும் ஹவாலா தரகர்களை  ஆந்திரா நுண்ணறிவு பிரிவு  அதிகாரிகள் கைது செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு பாகிஸ்தானுடன் பயங்கரவாத தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இது குறித்து போலீஸ் டைரக்டர் ஜெனரல் டி.கவுதம் சவாங் கூறியதாவது;-

இந்திய கடற்படை புலனாய்வு பிரிவு  மற்றும் மத்திய புலனாய்வு  அமைப்புகளுடன் இணைந்து  "ஆபரேஷன் டால்பின் மூக்கு"  என்ற ஒரு திட்டத்தை நடத்தியது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, 

மேலும் சில சந்தேக நபர்கள் விசாரிக்கப்படுகிறார்கள் என கூறினார். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் மோசடி தொடர்பான பிற விவரங்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.
 

தலைப்புச்செய்திகள்