Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்கக் கோரிய மனு தள்ளுபடி

டிசம்பர் 17, 2019 09:46

புதுடெல்லி: இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்கக் கோரி தாக்கலான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

பஞ்சாப், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, உள்ளிட்ட 8 மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பதால் முஸ்லீம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், போன்று இந்துக்களையும் சிறுபான்மை பட்டியலில் சேர்க்க வேண்டும்  என்று பாரதிய ஜனதா கட்சித் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாயா வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அமர்வு, மதத்தை நாடு தழுவிய கோட்பாடாக பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளது, சிறுபான்மையினமாக அறிவிப்பது என்பது அரசின் அதிகாரம் என்ற நீதிபதிகள் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்