Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

என்கவுன்டர்- தனி நீதிபதி விசாரணை: தலைமை நீதிபதி

டிசம்பர் 12, 2019 07:36

புதுடில்லி: தெலுங்கானாவில் என்கவுன்டர் விவகாரத்தில் உண்மை என்ன என்பது பற்றி மக்களுக்கு தெரிய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே தெரிவித்து உள்ளார்.

தெலுங்கானாவில் பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து, எரித்துக் கொன்ற 4 பேர், போலீசார் விசாரணையின் போது தப்பி ஓட முயன்றதால் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இந்த என்கவுன்டரை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கை இன்று தலைமை நீதிபதி பாப்தே தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, இதற்கு முன் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதியை நியமித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் நீதிபதியால் விசாரணை நடத்த முடியாது என வாதிட்டார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாப்தே, என்கவுன்டர் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை நடத்தப்படவில்லை என்றால் சுப்ரீம் கோர்ட் தலையிடும். என்கவுன்டரில் ஈடுபட்ட போலீசார் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீங்கள் வாதிட்டால், கிரிமினல் கோர்ட்டில் முறையிடலாம் எங்களுக்கு ஒன்றும் இல்லை. ஆனால் அவர்கள் அப்பாவிகள் என நீங்கள் கூறினால், மக்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரிய வேண்டும். 

ஆதாரம் இல்லாமல் உண்மையை நாங்கள் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. தனி நீதிபதி விசாரணை நடத்தட்டுமே, அதனை ஏன் எதிர்க்கிறீர்கள்? என தெரிவித்தார். பின் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கார் தலைமையில் விசாரணை நடத்தி ஆறு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

தலைப்புச்செய்திகள்