Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெண்பாக்கம் குடுமீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

மார்ச் 03, 2019 02:39

செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த வெண்பாக்கம் பகுதியில் உள்ள 1500 ஆண்டு பழமையான குடுமீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.  

செங்கல்பட்டு அடுத்துள்ள வெண்பாக்கம் பகுதியில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குடுமீஸ்வரர் கோயில் உள்ளது. இதில், மஹா கணபதி, வில்வமரத்து விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், துர்க்கை, நவக்கிரஹம், காலபைரவர் உள்ளிட்ட உப கோயில்கள் உள்ளன. இக்கோயிலில், 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேக விழா நடத்தப்பட வேண்டும் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இக்கோயிலில் காலபைரவருக்கு கோபுரம், குறிஞ்சி கோபுரம் கட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.  

முன்னதாக, கடந்த 3 தினங்களாக விநாயகர் பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரஹம், குபேர ஹோமம், காவிரி தீர்த்தம், முளைப்பாரி ஊர்வலம், எஜமான சங்கல்பம், கும்ப அலங்காரம், முதல்கால யாக வேள்வி பூஜை, காயத்ரி ஹோமம், பூர்ணாகுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.   

இதனை தொடர்ந்து இன்று காலை  நான்காம் யாக வேள்வி நடத்தப்பட்டு, குடிமீஈஸ்வரர் சுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர். 

தலைப்புச்செய்திகள்