Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகாவில் மீண்டும் குமாரசாமி ஆட்சியா? பெரும் பரபரப்பு

டிசம்பர் 02, 2019 11:02

பெங்களூரு: கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வலுவான நிலையில் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்த போதிலும் மாநிலங்களில் ஒவ்வொன்றாக ஆட்சியை இழந்து வருகிறது. 

குறிப்பாக சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சி, மகாராஷ்டிராவில் தனது ஆட்சியை இழந்தது. இதனை அடுத்து கர்நாடகாவிலும் ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் முதல்வராக இருந்த குமாரசாமியின் ஆட்சி திடீரென கவிழ்ந்தது. அவரது ஆட்சிக்கு ஆதரவு தந்து கொண்டிருந்த 17 எம்எல்ஏக்கள் திடீரென ஆதரவை வாபஸ் பெற்றதால் அவரது ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி பதவியேற்றது

இந்த நிலையில் குமாரசாமி ஆட்சிக்கு ஆதரவு வாபஸ் பெற்ற 17 எம்எல்ஏக்கள் பதவி இழந்ததை அடுத்து அந்த தொகுதிகளுக்கு வரும் 15-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் பாஜக 7 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே எடியூரப்பா ஆட்சி நீடிக்கும்.

இந்த நிலையில் வரும் இடைத்தேர்தலில் பாஜக 7 தொகுதிகளை பெறாமல் ஆட்சியை இழந்தால், மீண்டும் குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்க தயார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சித்தராமையா, மல்லிகார்ஜூனே ஆகியோர் தெரிவித்துள்ளனர். எனவே வரும் 15ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

தலைப்புச்செய்திகள்