Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீரில் 104 நாட்களுக்கு பின் மீண்டும் ரெயில் சேவை தொடங்கியது

நவம்பர் 18, 2019 06:56

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை கடந்த ஆகஸ்டு 5ந்தேதி மத்திய அரசு ரத்து செய்தது.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. முன்னாள் முதல் மந்திரிகள் மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா ஆகியோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து வன்முறை பரவி விடாமல் இருப்பதற்காக இன்டர்நெட் சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டது.  காஷ்மீரில் ஆகஸ்டு 5ந்தேதி முதல் ரெயில் சேவையும் தற்காலிக ரத்து செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ஸ்ரீநகர் மற்றும் பனிஹால் பகுதிகளுக்கு இடையேயான ரெயில் சேவை இன்று மீண்டும் செயல்பட தொடங்கியது.  இதற்காக கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை (நேற்று) என 2 நாட்கள் ஸ்ரீநகர் மற்றும் பனிஹால் பகுதிகளுக்கு இடையே ரெயில் சேவைக்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.  

இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்தனர்.  ரெயில் சேவை இன்று தொடங்கிய நிலையில், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தலைப்புச்செய்திகள்