Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உரிய இன்சூரன்ஸ் தொகையை வழங்க கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 25, 2019 08:02

கும்பகோணம்: கும்பகோணத்தில் பயிர் இன்சுரன்ஸ், கடன் தள்ளுபடி நெல் கொல்முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் பாதிப்புற்கேற்ற வகையில் உரிய இன்சூரன்ஸ் தொகையை உடனடியாக வழங்கிடு, பயிர் இன்சூரன்ஸ் தொகையை வங்கி கணக்கில் வரவு வைக்காமல் விவசாயிகளிடம்  நேரடியாக வழங்கிடு, 2017 - 2018ல் விடுபட்ட விவசாயிகளுக்கான இன்சுரன்ஸ் தொகையை இனியும் தாமதம் வழங்கிடு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு பட்டா சிட்டா இதர சான்றுகள் கேட்பதை கைவிடு ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

மேலும் பருவமழை தொடங்கி உள்ளதால் விவசாயிகளின் நெல்லை விரைந்து கொள்முதல் செய்திடவும் ஈரப்பதத்தை காரணம் காட்டாமல் கொள்முதல் செய்திடு விவசாயிகள் பெரும் நெருக்கடியில் உள்ளதால் விவசாயிகள் பெற்ற அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்திடு நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்திடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர்  மோகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாரதி ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம் உள்ளிட்ட நிர்வாகிகள் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினார்கள்.

தலைப்புச்செய்திகள்