Saturday, 27th April 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மலையாளி சங்கம் சார்பாக ஒன்பதாம் ஆண்டு ஓணம் பண்டிகை

அக்டோபர் 22, 2019 03:48

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் தனியார் மண்டபத்தில் ஒன்பதாம் ஆண்டு மலையாளி சங்கம் சார்பாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மெடிமிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் avஅனுப்பு  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார்.

இவ்விழாவில் கேரளத்து நாட்டு பாரம்பரியமான கோலங்கள் வரையப்பட்டிருந்தன மற்றும் பாரம்பரிய உடையணிந்து திருவாதிரை நடனமாடி அவங்கள் பாரம்பரியத்தை வெளிக்காட்டினர். பின்னர் மோகினி ஆட்டம் பரதநாட்டியம் நாட்டுப்புற பாடல் நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பில் அப்பகுதியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகளும் ரொக்கப் பரிசுகளும் சிறப்பு விருந்தினர் டாக்டர் a v அனுப்பு வழங்கினார். மலையாளி சங்க திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஹைடெக் மனோகரன், திருமுல்லைவாயில் பகுதி தலைவர்கள் கருணாகரன், சங்கரநாராயணன், கோபிநாதன், பொதுச் செயலாளர் விஜயன், பொருளாளர் ரகுநாதன் மற்றும் அப்பகுதி சுற்றுவட்டார கேரளத்து மலையாளி சங்க உறுப்பினர்களும் குடும்பத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் கேரளத்து பாரம்பரிய உணவு வகைகளும் விருந்தளிக்கப்பட்டது

தலைப்புச்செய்திகள்